72 ஆண்டுகளுக்குப் பிறகு..சுவிட்சர்லாந்திற்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை: ஆச்சரியத்தில் மக்கள் -
நாட்டின் கடந்த 12 மாத வானிலை குறித்து புள்ளி விவரங்கள் அடங்கிய ஆய்வு அறிக்கையை SRF வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் அதிக ஏற்றத்தாழ்வைக் காட்டுகின்றன
அதன் படி, கடந்த 12 மாதங்களில் நாட்டில் போதுமான மழை பெய்யவில்லை என தெரியவந்துள்ளது. சுவிஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
SRF புள்ளிவிவரங்கள் படி, 1947-க்குப் பிறகு இரண்டாவது வறட்சியாக கடந்த 12 மாதங்கள் அமைந்துள்ளன. ஆனால் நாட்டின் கிழக்குப் பகுதிகளில் சராசரியை விட 25 சதவிதத்திற்கு அதிக மழை பெய்துள்ளது.
மேலும், கடந்த குளிர்காலத்தில் கடும் பனிப்பொழிவு இருந்தபோதிலும், பனிப்பாறைகளின் நிலைமையும் கடந்த 12 மாதங்களில் மோசமாகியுள்ளன. அவை அனைத்தும் உருகிவிட்டன என அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
72 ஆண்டுகளுக்குப் பிறகு..சுவிட்சர்லாந்திற்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை: ஆச்சரியத்தில் மக்கள் -
Reviewed by Author
on
October 02, 2019
Rating:

No comments:
Post a Comment