உலகின் தலை சிறந்த கிரிக்கெட் கிளப்பின் தலைவராக பதவியேற்றார் சங்கக்காரா -
எம்.சி.சி.யின் முதல் பிரித்தானியர் அல்லாத தலைவராக திகழும் சங்கக்காரா, எதிர்வரும் ஒரு வருடம் இப்பதவியை வகிப்பார்.
உலக கிரிக்கெட்டில் மிகப் புகழ்பெற்ற கிரிக்கெட கிளப்புகளில் மேரிலிபோன் கிரிக்கெட் கிளப்பும் ஒன்றாகும். லண்டனில் உள்ள இந்த கிளப் சுமார் 232 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
எம்.சி.சி தலைவரின் மதிப்புமிக்க பதவியை வகிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு வருடம் வியக்கத்தக்க கிரிக்கெட்டைக் கட்டமைக்க எம்.சி.சி உடன் கடுமையாக உழைக்க எதிர்பார்க்கிறேன் என்று முன்னாள் இலங்கை அணித்தலைவர் கூறினார்.
நாங்கள் விரும்பும் விளையாட்டுக்கு அதிகமான ஆதரவாளர்களை மாற்றுவதற்கும், கிரிக்கெட்டிற்கும் அதன் சமூகங்களுக்கும் எம்.சி.சி உள்நாட்டிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் செய்யும் அருமையான பணிகளைப் பற்றி அவர்களுக்குக் கற்பிப்பதற்கான வாய்ப்பை நாங்கள் பெற்றுள்ளோம் என கூறினார்.
சங்கக்காராவுக்கு எம்.சி.சி உடன் நீண்ட தொடர்பு உள்ளது. அவர் 2002ல் கிளப்புக்கு எதிராக விளையாடினார், Chesterfield-ல் உள்ள குயின்ஸ் பூங்காவில் நடந்த முதல் தர போட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணிக்கான ஆரம்ப துடுப்பாட்டகாரராக களமிறங்கினார்.
2005-ல் சுனாமி நிவாரணப் போட்டியில் லார்ட்ஸில் நடந்த சர்வதேச லெவன் அணிக்கு எதிராக எம்.சி.சி.க்காக விளையாடினார்.
இந்த ஆண்டு மே மாதம் லார்ட்ஸில் நடந்த எம்.சி.சி ஆண்டு பொதுக் கூட்டத்தில், விடைபெறும் தலைவர் Anthony Wreford, சங்கக்காராவின் நியமனத்தை அறிவித்தார்.
அடுத்த 12 மாதங்களில் எம்.சி.சி தலைவராக பொறுப்பேற்க குமார் சங்கக்காராவை விட சிறந்த நபர் வேறு யாரும் இல்லை என்று Wreford கூறினார்.
சமூகங்களை ஒன்றிணைக்கும் சக்தி கிரிக்கெட்டிற்கு இருப்பதாக அவர் தீவிரமாக நம்புகிறார், மேலும் எம்.சி.சி செய்யும் முக்கியமான பணிகளுக்கு ஒரு முக்கிய தூதராக சங்கக்காரா இருப்பார் என Wreford கூறினார்.
உலகின் தலை சிறந்த கிரிக்கெட் கிளப்பின் தலைவராக பதவியேற்றார் சங்கக்காரா -
Reviewed by Author
on
October 02, 2019
Rating:

No comments:
Post a Comment