பிரான்ஸில் ஜனாதிபதி மேக்ரானின் புகைப்படத்தை திருடியவர்களுக்கு அபராதம்...
நாடு முழுவதும் உள்ள நகரமண்டபங்களில் இருந்து மேக்ரானின் சட்டம் அடிக்கப்பட்ட புகைப்படங்களை சமூக ஆர்வலர்கள் திருடியிருந்தனர்.
அதன் பின் அந்த புகைப்படங்களை வைத்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். மேமக்ரான் அரசுக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் பிப்ரவரி மாதம் பதிவாகியிருந்தது.
இதனால் பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் இந்த குற்றவியல் சம்பவத்துக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்ததால், இது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது திருடிய ஒவ்வொவருக்கும் எதிராக €1,000 அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இதையடுத்து இது தொடர்பான வழக்கு நேற்று பாரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, திருடிய மொத்தமாக எட்டுப்பேருக்கு தலா €500 படி அபராதம் விதிக்கப்பட்டது.
பிரான்ஸில் ஜனாதிபதி மேக்ரானின் புகைப்படத்தை திருடியவர்களுக்கு அபராதம்...
Reviewed by Author
on
October 18, 2019
Rating:

No comments:
Post a Comment