புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் தொடர்.. இலங்கையின் யார்க்கர் மன்னன் மலிங்கா புறக்கணிப்பு!
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டால் 100 பந்து கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடர், அடுத்த ஆண்டு சூலை 17ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 16ஆம் திகதி வரை நடக்கிறது.
இந்த தொடருக்கான ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா, மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல், தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

ஆனால் ஆந்த்ரே ரஸல்(மேற்கிந்திய தீவுகள்), ஆரோன் பிஞ்ச்(அவுஸ்திரேலியா), மேக்ஸ்வெல்(அவுஸ்திரேலியா), இம்ரான் தாஹிர்(தென் ஆப்பிரிக்கா), சுனில் நரைன்(மேற்கிந்திய தீவுகள்) ஆகியோர் முதல் சுற்றிலேயே ஏலம் எடுக்கப்பட்டனர்.
மேலும், ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கானை ஏலத்தில் எடுக்க 8 அணிகளும் போட்டியிட்டன. இறுதியில் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் தொடர்.. இலங்கையின் யார்க்கர் மன்னன் மலிங்கா புறக்கணிப்பு!
Reviewed by Author
on
October 22, 2019
Rating:
No comments:
Post a Comment