தனது செய்திக்கு முக்கியத்துவம் இல்லையென நிருபர் ஒருவர் நகர சபை கூட்ட அமர்விலிருந்து தலைவரால் வெளியேற்றப்பட்டார்.
மக்கள் குறைகளையே வெளிப்படுத்திவரும் அதேவேளையில் தனது செய்தி
வருவதில்லையென தெரியப்படுத்தி நிருபர் ஒருவரை மன்னார் நகர சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் எனத் தெரிவித்து மன்னார் நகர சபையின் தவிசாளர் இவரை வெளியேற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று திங்கள் கிழமை (21.10.2019) மன்னார் நகர சபையின் 20 வது மாதாந்த
அமர்வு இடம்பெற்றது.
இவ் அமர்வு ஆரம்பமாக இருக்கும் தருணத்தில் நிருபர் ஒருவர் செய்தி
சேகரிப்பதற்காக இவ் அமர்வு நடக்கும் மண்டபத்தில் நுழைந்துள்ளார்.
அப்பொழுது அமர்வு மண்டபத்தில் ஏனைய நகர சபை உறுப்பினர்கள் மற்றும்
செய்தியாளர் ஒருவரும் அங்கு சமூகமளித்திருந்தவேளையில் தவிசாளர் இவ்
செய்தியாளரை தனது இருப்பிடத்துக்கு அழைத்து நீர் இங்கு உறுப்பினர்களால்
தெரியப்படுத்தும் மக்கள் குறைகளையே எழுதுகின்றீர் எனது செய்தியை
எழுதுவதில்லையென சுட்டிக்காட்டியபோது அதற்கு இவ்
செய்தியாளர் என்ன செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்.
நீர் எனது செய்தி எழுதாததால் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது
வெளியேறவும் என தெரிவித்ததைத் தொடர்ந்து அவ் நிருபர் அவ் மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ் மன்னார் நகர சபையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின்
அதிகாரத்திலிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவ்
செய்தியாளர் தனது ஊடகத்துறையில் 45 வருடகால அனுபவத்தில் இதுவே தனிப்பட்ட முறையில் வெளியேற்றப்பட்டதில் முதல் அனுபவம் எனவும்
தெரிவிக்கப்படுகின்றது.

Reviewed by Author
on
October 22, 2019
Rating:

No comments:
Post a Comment