மன்னார்-பாடசாலை மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் தொடர்பான செயலமர்வு
மன்னார் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கம் சகவாழ்வு மற்றும் வன்முறையற்ற தொடர்பாடல் தொடர்பான தெளிவூட்டல் மற்றும் கருத்துப்பகிர்வு நிகழ்வானது நேற்று திங்கட்கிழமை மதியம் மன் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில் ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜோசப் நயன் தலைமையில் இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் இன மத ரீதியான முரண்பாடுகளை கடந்து நல்லிணக்கத்தை சமுதாய ரீதியில் கட்டியெழுப்பும் நோக்கில் ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் சுமார் 20 மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்காக குறித்த விழிப்புணர்வு செயலமர்வுகள் ஒழுங்செய்யப்பட்டு இடம் பெற்றுவருகின்றது.
அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் நல்லிணக்கம் தொடர்பான கருத்துரைகள் வழங்கப்பட்டதுடன் நிலைமாறுகால நீதி மற்றும் நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் மத இன முறுகல் தொடர்பாகவும் அவற்றின் ஊடாக கற்று கொண்ட பாடங்கள் தொடர்பான காணொளிகளும் காட்சிப்படுத்தப்பட்டன
குறித்த நிகழ்வில் 200 மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட ஒன்று கூடுவோம் இலங்கை அமைப்பின் மாவட்ட இனைப்பாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

Reviewed by Author
on
October 22, 2019
Rating:

No comments:
Post a Comment