மன்னார் சௌத்பார் கடற்பகுதியில் சட்ட விரோத கடல் அட்டைகளுடன் மூவர் கடற்படையினரால் கைது-படம்
மன்னார் சௌத்பார் கடற்பகுதியில் 55 கடல் அட்டைகளுடன் 3 பேரை கடற்படையினர் நேற்று சனிக்கிழமை (12) கைது செய்துள்ளனர்.
வட மத்திய கடற்படையினர் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது, அனுமதி இல்லாமல் சௌத்பார் கடலில் பிடிக்கப்படட கடல் அட்டைகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடல் அட்டை பிடிக்க பயண் படுத்தப்பட்ட டிங்கி -1, ஓ.பி.எம்-1, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்-5 ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் போது கைது செய்யப்படட சந்தேக நபர்கள் 25, 27 மற்றும் 28 வயதுடைய மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
வட மத்திய கடற்படையினர் நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது, அனுமதி இல்லாமல் சௌத்பார் கடலில் பிடிக்கப்படட கடல் அட்டைகள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடல் அட்டை பிடிக்க பயண் படுத்தப்பட்ட டிங்கி -1, ஓ.பி.எம்-1, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்-5 ஆகியவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதன் போது கைது செய்யப்படட சந்தேக நபர்கள் 25, 27 மற்றும் 28 வயதுடைய மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மன்னார் கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

மன்னார் சௌத்பார் கடற்பகுதியில் சட்ட விரோத கடல் அட்டைகளுடன் மூவர் கடற்படையினரால் கைது-படம்
Reviewed by Author
on
October 13, 2019
Rating:

No comments:
Post a Comment