வேட்பு மனுத் தாக்கல் செய்த எந்தவொரு வேட்பாளரும் தேர்தலிலிருந்து விலகிக் கொள்ள முடியாது -
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எவரும் தற்போது தேர்தலிலிருந்து விலகி கொள்ள முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுத் தாக்கல் செய்த எந்தவொரு வேட்பாளரும் வேறு ஓர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, தேர்தலிலிருந்து விலகிக் கொள்ள சட்டத்தில் இடமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள சில வேட்பாளர்கள் வேறு பிரதான வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து தேர்தலிலிருந்து விலகி கொள்ள உத்தேசித்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தெற்கு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
சட்ட ரீதியாக வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே வாக்குச் சீட்டில் உள்ளடக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேறு ஓர் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து விலகி கொள்ள முடியாது என கூறியுள்ளார்.
வேட்பு மனுத் தாக்கல் செய்த எந்தவொரு வேட்பாளரும் தேர்தலிலிருந்து விலகிக் கொள்ள முடியாது -
Reviewed by Author
on
October 13, 2019
Rating:
Reviewed by Author
on
October 13, 2019
Rating:


No comments:
Post a Comment