மன்னாரில் இருந்து சமய நல்லிணக்க குழு சிலாபத்திற்கு விஜயம்-சிலாபம் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு
மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சர்வமத செயற்பாடுகளின் ஒரு பகுதியான மதத்தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
மன்னாரில் இருந்து சமய நல்லிணக்க குழுவானது வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செ.அன்ரன் அடிகளார் தலைமையில் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை சிலாபம் மறைமாவட்டத்திற்கு பயணம் செய்திருந்தனர்.
சிலாபம் மறை மாவட்டத்திற்கு பயணத்தை மேற்கொண்டிருந்த சமயநல்லிணக்க குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சிலாபம் மறைமாவட்ட வாழ்வுதய மண்டபத்தில் ஒன்று கூடினர்.இதன் போது சிலாபம் மறை மாவட்டத்தைச் சேர்ந்த சர்வத மத தலைவர்கள் மற்றும் மக்களும் இணைந்து கொண்டனர்.
சமய தலைவர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான அறிமுக நிகழ்வும் அதனை தொடரந்து கருத்துக்களை பரிமாரிக் கொள்ளும் நிகழ்வும் இறுதியில் பொது கலந்துரையாடல்களும் இடம் பெற்றது.
நிகழ்வின் மேலதிக செயற்பாடாக சர்வமத செயற்திட்டத்தின் நோக்கம் தொடர்பாகவும், கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மூலம் அடையப்பட்ட விளைவுகள் தொடர்பான கலந்துரையாடல் நடாத்தப்பட்டதுடன் எதிர் வரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளுக்கான திட்டமிடலும், ஆலோசனையும் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து சிலாபத்தில் உள்ள சர்வ மதங்களையும் பிரதிபலிக்கும் வணக்கஸ்தளங்களுக்கு விஜயம் செய்தனர்.
குறிப்பாக வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு தினங்கள் கத்தோழிக்க ஆலயம், இந்து ஆலயம்,விகாரை,பள்ளிவாசல் ஆகிய மதஸ்தளங்ககுக்கு நல்லிணக்க விஜம் மேற்கொண்டனர்.
-நேற்று சனிக்கிழமை சிலாபம் ஆயர் இல்லத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு சிலாபம் மறைமாவட்ட ஆயருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சிலாபத்தில் உள்ள சிங்கள மற்றும் முஸ்ஸீம் மக்கள் ஒருமித்து வாழும் கிராமம் ஒன்றிற்கு விஜயம் செய்தனர். குறித்த நல்லிணக்க விஜயத்தின் போது மன்னார் மாவட்டத்தில் இருந்து சர்வ மதத்தையும் பிரதி நிதித்துவப்படுத்தும் சர்வமத பிரதி நிதிகள் அரச ஊழியர்கள், உற்பட 30 பேர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
October 28, 2019
Rating:

No comments:
Post a Comment