மூன்று கால்கள் இரண்டு பாலுறுப்புகளுடன் பிறந்த அதிசய குழந்தை: மருத்துவர்கள் தெரிவித்துள்ள முக்கிய தகவல்!
அந்த குழந்தை இரட்டைக் குழந்தையாக உருவாகியிருக்க வேண்டும், அதன் மூன்றாவது கால் அந்த குழந்தையுடன் உருவான இன்னொரு குழந்தையின் காலாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
என்றாலும், அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்குப்பின் அந்த குழந்தையால் மற்றவர்களைப்போல சாதாரண வாழ்வை மேற்கொள்ள முடியும் என உறுதியளித்தனர்.

பின்னர் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உபரி உறுப்புகள் அகற்றப்பட்டன.
கர்ப்பத்திலிருக்கும்போதே அந்த குழந்தைக்கு மூன்றாவது கால் இருப்பது தெரியவந்தாலும், அதை கருக்கலைப்பு செய்ய அதன் தாய் மறுத்துவிட்டதோடு, அந்த குழந்தையை சுகப்பிரசவத்திலும் பெற்றெடுத்தார் அவர்.
குழந்தை பிறந்த உடனே, அதற்கு ஒரு ஆசன வாய் ஏற்படுத்தப்பட்டு அதன் கழிவுகள் அகற்றப்பட உதவி செய்தனர் மருத்துவர்கள்.
2018ஆம் ஆண்டு யூலை மாதம் பிறந்த அந்த சிறுவன் இப்போது நன்றாக இருப்பதாகவும், நடப்பதாகவும் தெரிவித்துள்ள மருத்துவர்கள், அவன் மற்ற குழந்தைகளைப்போலவே சாதாரணமாக வாழ்வான் என்று தெரிவித்துள்ளார்கள்.



மூன்று கால்கள் இரண்டு பாலுறுப்புகளுடன் பிறந்த அதிசய குழந்தை: மருத்துவர்கள் தெரிவித்துள்ள முக்கிய தகவல்!
Reviewed by Author
on
October 13, 2019
Rating:
No comments:
Post a Comment