சுவிஸ் தேசிய Inline hockey U19 அணியில் சிறந்த பந்து காப்பாளனாக தமிழர் ஒருவர் தெரிவு! -
சுவிஸ் நாட்டின் தேசிய Inline hockey U19 அணியில் சிவசுப்ரமணியம் அஷ்வின் எனும் 17 வயதுடைய இளைஞரொருவர் சிறந்த பந்து காப்பாளனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் சுவிஸ் நாட்டின் ஜூரா மாநிலத்தில் வசித்து வருகின்றார்.
இவர் தனது சிறுவயது முதல் சுவிஸ் நாட்டின் பெரிய Hockey கழகங்களான EHC Bienne, HC Ajoie, HC Delémont, SHC Rossemaison ஆகிய கழகங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார்.
2012ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன் கிண்ணத்துக்கான போட்டியில், 2014ம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற உலக கிண்ணத்துக்கான போட்டிகளில் சுவிஸ் அணி பந்துகாப்பாளராக விளையாடி சிறந்த பந்து காப்பாளர் விருதை பெற்றுள்ளார்.
மேலும் சுவிஸ் நாட்டில் நடைபெறும் LNA, LNB ,JOUNIOR League விளையாட்டுகளில் பல வெற்றிகளை தனதாக்கி பல சிறந்த விருதுகளை பெற்றுள்ளார்.
11-13.Oct.2019 ஜெர்மனியில் நடைபெற்ற U19 ஐரோப்பிய நாடு சாம்பியன் கிண்ணத்துக்கான போட்டியில் சுவிஸ் நாட்டு அணி பந்து காப்பாளராக விளையாடி இறுதி போட்டியில் சுவிஸ் நாடு சாம்பியனாகவும், (All star team) சிறந்த பந்து காப்பாளர் விருதையும் பெற்றுள்ளார்.
இவர் சுவிஸ் நாட்டின் Inline hockey தேசிய மட்டத்தில் முதல் தமிழனாக தன்னை அடையாளப்படுத்தி விளையாடி வருவது நம் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும். அஷ்வின் சிவசுப்ரமணியத்துக்கு எமது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

Reviewed by Author
on
October 23, 2019
Rating:

No comments:
Post a Comment