அனோஜனை மீட்க களமிறங்கும் தேரர்கள்; நாளை கோட்டையில் போராட்டம்
> சவூதி அரேபியாவில் தண்டனை எதிர்கொண்டு வரும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை ஜனசெத பெரமுனவின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தலைமையிலான குழுவினர் இன்று (22) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
கல்முனை நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜனின் வீட்டுக்குச் சென்ற குழுவினர், குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கியதுடன், அனோஜனை தண்டனையிலிருந்து மீட்பதற்காக தாம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தனர். இதன்போது ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பத்தரமுல்லே சீலரத்ன தேரர்,
நாளை கோட்டையில் போராட்டம்
அனோஜனின் உயிரைப் பாதுகாத்து அவரை மீட்டுத் தருமாறு கோரி நாளை (23) கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக விசேட கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் நாட்களில் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்திற்குச் சென்று அனோஜன் தொடர்பான கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்காக எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்புக்கு வருகை தருமாறு அனோஜனின் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அதனை குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதன்போது அனோஜனின் தாயார், தனது மகனை மீட்டுத் தருமாறு இலங்கை மக்களிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்ததுடன், தனது மகன் செய்த தவறுக்காக மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரினார்.
இச்சந்திப்பில் கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரரும் கலந்துகொண்டார். தமிழ் - சிங்கள மொழிபெயர்ப்பு உதவிகளும் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
September 22, 2026
Rating:
.jpg)

No comments:
Post a Comment