மன்னாரில் நீர் பெறும் வாடிக்கையாளர்களிடம் நிலுவைப் பணத்தை அறவீடு செய்யும் பணயில் 2ம் கட்ட நடவடிக்கை-
மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரிடமிருந்து நீர்
பெறும் வாடிக்கையாளர்களிடமிருந்து நிலுவைப் பணத்தை அறவீடு செய்யும்
முதல் கட்ட நடவடிக்கையில் 90 வீதமானோர் தங்கள் நிலுவைப் பணத்தை
செலுத்தியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை வட்டாரம்
தெரிவித்துள்ளது. அத்துடன் தற்பொழுது அறவீடும் பணியில் இரண்டாம் கட்ட
நடவடிக்கையிலும் இறங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரிடமிருந்து நீர் பெறும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள்
தங்கள் பணத்தை செலுத்துவதில் அக்கரைக் காட்டாது இருந்து வந்தமையால்
பெருந் தொகை பணம் பலரிடம் நிலுவையாக இருந்து வருகின்றன.
இதை கவனத்தில் கொண்டு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பகுதி பகுதியாக மேற்கொள்ளும் நடவடிக்கையில் கடந்த மாதம் எடுத்த முதல் கட்டநடவடிக்கையில் 2500 வாடிக்கையாளர்களில் 90 வீதமானவர்கள் தங்கள் நிலுவைப் பணத்தை செலுத்தியுள்ளதாக இவ் வட்டாரம் தெரிவிக்கின்றது.
இதைத் தொடர்ந்து பகுதி பகுதியாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில்
தற்பொழுது இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்பட இருக்கும் பகுதியில் 1800 பேர் நிலுவைப் பணத்தை செலுத்த வேண்டியவர்களாக இருப்பதால் இவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் குறிப்பிட்ட தினத்தில் தங்கள் நிலுவைப் பணத்தை செலுத்த தவறின்
இவர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படும் நிலை உருவாகும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நீருக்கான நிலுவைப் பணத்தை செலுத்தி நீர் விநியோகத் துண்டிப்பை
நிறுத்திக் கொள்ளுமாறும் தேசிய நீர் வழங்கல் சபையிடமிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மன்னாரில்  நீர் பெறும் வாடிக்கையாளர்களிடம் நிலுவைப் பணத்தை அறவீடு செய்யும் பணயில் 2ம் கட்ட நடவடிக்கை-
 Reviewed by Author
        on 
        
October 13, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 13, 2019
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 13, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 13, 2019
 
        Rating: 

 
 
 

 
 
 
.jpg) 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment