23,000 பிரித்தானியர்கள் கடந்த ஆண்டு உயிரிழப்பு... என்ன காரணம்? வெளியான தகவல் -
இங்கிலாந்து மற்றும் வேல்சில் கடந்த 2018-19-ஆம் ஆண்டில் 23,000 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய புள்ளி விவரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் குறைவு எனவும் 2017-18-ஆம் ஆண்டில் 49,410 பேர் உயிரிழந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதில் இங்கிலாந்தில் 40.6 சதவீதத்தினர் மற்றும் வேல்சில் 42.9 சதவீதத்தில் சுவாச பிரச்னை காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த குளிர்காலத்தில் இறந்தவர்களில் அதிகமாக ஆண்களை விட பெண்களே உள்ளனர். அவர்களின் வயது 90 வயதை அடைந்ததாக உள்ளதாக அலுவலக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்தில் இந்த ஆண்டு அதிகமாக குளிர் இருந்த மாதங்களாக ஜனவரி 31-ஆம் திகதி மற்றும் பிப்ரவரி 1-ஆம் திகதி இருந்துள்ளது.
இந்த இரண்டு நாட்களிலும் அதிகபட்ச வெப்பநிலை 1.7C மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் குளிர்காலத்தில் மட்டும் சராசரியாக 121 நாட்களில் 97 பேர் உயிரிழப்பது தெரியவந்துள்ளது.
23,000 பிரித்தானியர்கள் கடந்த ஆண்டு உயிரிழப்பு... என்ன காரணம்? வெளியான தகவல் -
Reviewed by Author
on
November 27, 2019
Rating:

No comments:
Post a Comment