மன்னார் மாவட்டத்தில் தங்க நகை கொள்வனவு செய்தல் தொடர்பில் வெளியான செய்திக்கு விளக்கம்.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சில நகை தொழிலகங்கள் மற்றும் தங்க நகை விற்பனை நிலையங்களில் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்படுவதாகவும் நகைகளை பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் இன்மையால் மக்கள் ஏமாற்றப்படுவதாக பாதீக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஊடகங்களில் வெளி வந்த செய்தி குறித்து மன்னாரில் உள்ள நகை தொழிலகங்கள் மற்றும் தங்க நகை விற்பனை செய்யும் நிலையங்களின் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,
-கடந்த செவ்வாய்க்கிழமை சில ஊடகங்களில் மன்னார் மாவட்டத்தில் தங்க நகைகளை கொள்வனவு செய்யும் மக்கள் ஏமாற்றப்படுவதாக செய்தி வெளியாகி இருந்தது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகை தொழிலகங்கள் மற்றும் தங்க நகை விற்பனை நிலையங்களில் பல வருடங்களாக மக்களின் நன் மதிப்பை பெற்றுள்ளதோடு, மக்களுக்கு உண்மையாகவும்,நீதியாகவும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
-எனினும் இத்தொழிலில் ஒரு சிலர் விடுகின்ற தவறு ஒட்டு மொத்த நகை தொழிலகங்கள் மற்றும் தங்க நகை விற்பனை நிலையங்களை பாதீக்கின்றது.அதற்கமைவாக குறித்த செய்தி வெளி வந்துள்ளது.
குறித்த செய்தியானது நேர்மையான முறையில் மக்கள் மத்தியில் நன் மதிப்பைப் பெற்றுள்ள நகை தொழிலகங்கள் மற்றும் தங்க நகை விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தவறு செய்கின்றவர்கள் மீது நேரடியாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.ஒட்டு மொத்தமாக பலி சுமத்துவது மன்னார் மாவட்ட மக்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்றுள்ள எங்கள் மீது களங்கத்தை ஏங்படுத்தும் நடவடிக்கை.
எனவே தவறு செய்கின்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Reviewed by Author
on
November 21, 2019
Rating:

No comments:
Post a Comment