மன்னாரில் முதன்முதலாய் இடம் பெற்ற ஒளவையார் விழா-படங்கள்
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் ஏற்பட்டில் மாவட்ட ரீதியில் அற நெறி பாடசாலை மாணவர்கள் மற்று மாவட்ட இந்து மக்களை ஒன்றினைத்து முதல் முதலாக ஒளவையார் விழாவும் அத்துடன் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் செந்தமிழருவி மாஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இன்று மாலை 2-30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் பிரதேச செயலகத்தில் உள்ள ஒளவையார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு விருந்தினர்கள் மற்றும் சைவ மக்கள் அணைவரும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஒளவையார் விழாவானது ஆரம்பமானது.
குறித்த நிகழ்வுற்கு பிரதம விருந்தினராக மன்னார் பிரதேச செயளாலர் கனகாம்பிகை சிவசம்பு அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சித்த ஆயுள்வேத வைத்தியர் செல்வி பூ.றோகினி மற்றும் ஓய்வு நிலை ஆசிரியர் திருமதி.செல்வரெட்ணம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அதே நேரத்தில் 2019 ஆண்டு இடம் பெற்ற புலமை பரிசீல் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் மற்றும் சிறப்பாக செயற்பட்ட ஆசிரியர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வும் இடம் பெற்றதுடன் மாணவ மாணவிகளின் நாடகம் நடனம் பாடல் பேச்சு என்பனவும் சிறப்பாக இடம்பெற்றது.

Reviewed by Author
on
November 23, 2019
Rating:

No comments:
Post a Comment