புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ விடுத்துள்ள முதலாவது அதிரடி உத்தரவு -
அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ உத்தரவிட்டுள்ளார்.
எந்தவொரு அரச அலுவலகங்களிலும் எனது படமோ,பிரதமரின் படமோ அல்லது அமைச்சர்களின் படமோ காட்சிப்படுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச அலுவலகங்களில் அரச தேசிய சின்னம் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்க்ஷ தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு தற்சமயம் அனுராதபுரத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்க்ஷ விடுத்துள்ள முதலாவது அதிரடி உத்தரவு -
Reviewed by Author
on
November 18, 2019
Rating:

No comments:
Post a Comment