உலகில் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியல் வெளியானது!
2019-ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். இதனால் அடுத்த ஆண்டு உலகின் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் சிலர் திட்டமிட்டிருப்பர்.
அந்த வகையில் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியல் மற்றும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை தி டிரவால் ரிஸ்க் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது,
இந்த நிறுவனம் குறித்த நாடுகளுக்கு பயணம் செய்த பயணிகளின் அனுபவம் குறித்து வெளியிட்டுள்ளது. குறிப்பாக அங்கு ஆரோக்கியமாக இருக்க முடியுமா? பாதுகாப்பு எப்படி இருக்கும்? சாலை பாதுகாப்பு போன்றவை அடிப்படையாக வைத்து வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி லிபியா, சோமாலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் இந்த மூன்றுமே மிகவும் மோசமாக உள்ளது. ஆப்பிரிக்கா நாடுகளான நைஜீரியா, சேய்ரீரா லியோன், லிபிரியா, Guinea, ஏமன்,சிரியா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் ஆரோக்கியமாக இருப்பது கடினம்.

அதே சமயம் அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஜப்பான், வடகொரியா மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் ஆரோக்கிய பாதிப்பு மிகவும் குறைவு.

ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், லீயா மற்றும் சோமாலியா நாடுகளில் பாதுகாப்பு மிகவும் மோசம், அதே சமயம் கிரீன்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் சோல்வினியாவில் பாதுகாப்பாக இருக்கலாம்.
வெனிசுலா, பெலிஜீ, சவுதி அரேபியா, Dominican Republic, வியட்நாம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் சாலை மிகவும் ஆபத்தாக இருக்கும்.
அதே சமயம் ஐரோப்பிய நாடுகளான நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் சாலையில் பயமில்லாமல் செல்லலாம், அந்தளவிற்கு பாதுகாப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியல் வெளியானது!
Reviewed by Author
on
November 18, 2019
Rating:

No comments:
Post a Comment