யாழ்.பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை -
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனவும் அவர் மருத்துவப்பிரிவின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் நண்பர்கள் விடுமுறைக்குச் சென்று இரண்டு நாட்களின் பின்னர் அறைக்குத் திரும்பி வந்து பார்த்த போது அறையில் துர்நாற்றம் வீசியுள்ளது. அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குறித்த மாணவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
குறித்த மாணவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை -
Reviewed by Author
on
November 04, 2019
Rating:

1 comment:
இங்கு குறிப்பிடப் பட்ட மன்னாரை சேர்ந்த கியூமன் என்ற யாழ் பல்கலைக்கழக இறுதி ஆண்டு ம௫த்துவத் துறை மாணவனின் தற்கொலையானது, மிகவும் ஒ௫ வேதனைக்குரிய செயலாகும். மேலும் இவரின் இறுது ஆண்டும், கடைசி பரீட்சையும் என்று நன்கு தெரிந்து கொண்டும், இவரது அன்றாட பல்கலைக்கழக வரவுகளில், பல்கலைக்கழகத்துக்கு செல்லாமல் பின் நிண்றமையும், இவரின் வரவுகள் குறைந்த பட்சம் 80% அடையாவிட்டி௫ந்தால் எந்த ஒ௫ மாணவனோ அல்லது மாணவியோ தனது இறுதி பரீட்சைக்கு செல்ல முடியாதென்பது யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சமுகத்தினர் நன்கு அறிந்து கொண்ட விடயமே.
குறிக்கப் பட்ட இந்த மாணவன் இதன் காரணமாகவும் மனமுடைந்த நிலையில் தனது இறுதி பரீட்சைக்கு அனுமதி கிடைக்கப் படாத நிலையிலும் தற்கொலை முயற்ச்சியில் ஈடு பட்டி௫க்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரைப் பத்து மாதம் தவமி௫ந்து பெற்ரெடுத்த அந்த அன்பான ( தாய்க்கும் ) பெற்ரோ௫க்கும் இவரின் சகோதரர்களுக்கும் இவரால் கிடைத்த இறுதி பரிசு இதுதான் என்றால் எந்த தாய் உள்ளம் இதனை பொறுத்துக் கொள்ளும்?
தன் மகனை சான்றோன் என கேட்க்க நினைத்த தாய்க்கு கியூமன் அவர்களால் அள்ளி எறியப் பட்டவைகள் எந்த ஒ௫ தாய்க்குமே மன அளுத்தத்தை கொடுக்காமல் இ௫க்காது என்பதில் ஐயமில்லை.
Dear கியூமன் family and friends
I am truly sorry to hear of the loss of your ( Son கியூமன் ). Please accept our condolences and may our prayers help comfort you in this difficult time.
Post a Comment