மீண்டும் தொல்லைதரும் நல்லாட்சி அரசின் தொல்பொருள் திணைக்களம்
தொல்பொருள் திணைக்களமானது நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கன்னியா வெந்நீர் ஊற்றை ஆக்கிரமித்து இலங்கையில் தமிழர் வரலாற்றை அழிக்க எடுத்த முயற்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது.
அதே போல் முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமிக்க முயற்சி எடுக்கப்பட்டு. அந்த முயற்சியில் ஈடுபட்ட பிக்கு இறந்த பொழுது நீதிமன்ற உத்தரவை மீறி பிக்குவின் உடல் நல்லாட்சி அரசின் ஆதரவுடன் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டது. இன்று வரை நீதிமன்ற தீர்ப்பை அவதூறு செய்தவர்களுக்கு எதிராக நல்லாட்சி அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் நெடுங்கேணி வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக தொல்லியல் திணைக்களத்தினால் முறைப்பாடு செய்யப்பட்டு நெடுங்கேணி பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கபட்டு வருகின்றது.
இதே வேளை தற்பொழுது வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாளிகை கிராம அலுவலர் பிரிவில் உள்ள மாளிகை கிரமாமானது அன்றைய வன்னி இராச்சியத்திற்குட்பட்ட குறுநில மன்னர்கள் மாளிகைகளை அமைத்து அப்பகுதியில் வாழ்ந்ததால் அக்கிரமாமனது மாளிகை என்று அழைக்கப்படுவதோடு.அங்கு வாழ்ந்த குறுநில மன்னனும் மக்களும் வழிபட அமைக்கப்பட்ட ஆலயமான காட்டு விநாயகர் ஆலயம் அன்றிலிருந்து இன்றுவரை காட்டு விநாயகர் ஆலயம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வருகின்றது.மேலும் இப்பகுதியில் குறுநில மன்னர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று சான்றுகள் பல காணப்படுகின்றன.
நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இவ்வாலயம் பற்றைக்காடாக காணப்பட்டது இந்த நிலையில் அவ்வூர் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர்களிடம் கம்பெரலியா திட்டத்தில் குறித்த ஆலயத்தை புணரமைப்பு செய்வதற்கு உதவி கோரப்பட்டபொழுது குறித்த கிராமத்தில் சனத்தொகை குறைவு என்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கிராமத்தில் உள்ள காட்டு விநாயகர் கோவிலை புனரமைப்பு செய்தால் கம்பெரலியா ஒதுக்கீடு நட்டமடையும் என கருதி குறித்த கிராமத்திற்கு ஒதுக்கீடு செய்யவில்லை.
வாக்களித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கைவிட்டநிலையில் குறித்த கிராம மக்கள் வீடுகளுக்கு தோறும் ஒரு மூட்டை நெல்லை பெற்று விற்பனை செய்து பெற்ற பணத்தில் காட்டு விநாயகர் ஆலயத்தை துப்புரவு செய்ய முற்பட்டபொழுது 31/10/2019 ஓமந்தை பொலிசாருடன் மாளிகை கிராமத்தின் காட்டு விநாயகர் ஆலயத்தில் பிரசன்னமான தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இவ்வாலயம் அமைந்துள்ள விநாயகர் ஆலயமானது பண்டைய அனுராதபுர இராச்சியத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்ததாகவும் ஆலய நிர்வாகம் தொல்பொருள் எச்சங்களை சேதப்படுத்தி விட்டதாகவும் ஆலய நிர்வாகத்தை சேர்ந்த சுப்பிரமணியம் மற்றும் அகிலன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆயர்படுத்தியது.ஆலய நிர்வாகத்தை சேர்ந்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறும் குறித்த வழக்கை 05/11/2019 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் விளக்க மறியலில் உள்ள ஆலய நிர்வாகத்தை சேர்ந்த சுப்பிரமணியம், அகிலன் ஆகியோரை நேற்றைய தினம் வவுனியா சிறைச்சாலையில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Reviewed by Author
on
November 04, 2019
Rating:

No comments:
Post a Comment