அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற விசேட நடமாடும் சேவை-படம்


இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மன்னார் உப காரியாலயத்தின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  இலுப்பைக்கடவை பகுதிகளில் விசேட நடமாடும் சேவை  இன்று லௌ;ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இலுப்பைகடவை கலாச்சார மண்டபத்தில் இடம் பெற்றது.

குறித்த நடமாடும் சேவைக்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் ரி. கணகராஜ். மாவட்ட ரீதியாகவும் மாகண ரீதியாகவும் சேவை வழங்கும் திணைக்களங்கள் மற்றும் ஆணையாளர்கள் பிரதேச செயலாளர்கள் உட்பட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மக்களின் காணி , அடிப்படை உரிமை ,சட்ட உதவி போன்ற விடையங்கள் தொடர்பாக விசேட உதவிகளை வழங்கும் முகமாக குறித்த நடாமாடும் சேவையானது ஏற்பாடு செய்யப்பட்டது.

-இதன் போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










மன்னார் மனித உரிமை ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இடம் பெற்ற விசேட நடமாடும் சேவை-படம் Reviewed by Author on November 22, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.