பத்து வருடங்களாக தனிநபர் ஒருவரிடமிருந்த அரச விவசாய காணி மீட்கப்பட்டு கிராம விவசாயிகளிடம் கையளிப்பு
மன்னார் முசலிப்பிரதேச செயலகப் பிரிவில் பத்து வருடங்களாக விவசாய
குளத்துக் காணி ஒன்றை அடாத்தாக கையடக்கி வைத்திருந்தது தற்பொழுது
மீட்கப்பட்டு அப்பகுதி விவசாயிகள் பலன் அடையக்கூடிய தன்மைக்கு
உருவாக்கித்தந்த அதிகாரிகளுக்கு அப்பகுதி விவசாய அமைப்பு நன்றி
தெரிவித்து நிற்கின்றது.
மன்னார் முசலிப் பகுதியில் அகத்திமுறிப்பு பகுதியிலுள்ள எம்.என். 143
கிராம அலுவலகர் பிரிவிலுள்ள தாண்டிக்குளம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 62 ஏக்கர் குளத்துக் காணி ஒன்றை கடந்த பத்து வருடங்களாக தனி நபர் ஒருவர் அடாத்ததாக தன்வசம் கைப்பற்றி வைத்திருந்தார்.
இது விடயமாக இப் பகுதி விவசாய அமைப்பு மேலிடத்துக்கு பல முறை செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து கொழும்பு நீர்ப்பாசன பணிப்பாளர்
நாயகத்திடமிருந்து கொண்டுவரப்பட்ட வரைப்படத்தைத் தொடாந்து தற்பொழுது இவ் காணி தனியாரிடமிருந்து மீளப்பெறப்பட்டுள்ளது எனவும்,
இவ் காணியில் தற்பொழுது குளத்துக்கான அணைக்கட்டுக்கான எல்லைகளும் இடப்பட்டுள்ளன. இதனால் இக் குளத்தில் நீரை தேக்கி வைத்து இப்பகுதியில் வாழும் 475 விவசாய குடும்பங்கள் நன்மை அடைய இருப்பதாக இப் பகுதி விவசா அமைப்பு கொழும்பு நீர்பாசன பணிப்பாளர், முருங்கன் மற்றும் சிலாபத்துறை நீர்பாசன பொறியியலாளர்களுக்கு நன்றியை தெரிவித்து நிற்பதாகவும்
தெரிவிக்கின்றனர்.

Reviewed by Author
on
November 14, 2019
Rating:

No comments:
Post a Comment