தமிழினத்தை அழித்த கோட்டாபாயவுக்கு தமிழினம் பாடம்புகட்ட வேண்டுமானால் சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும் சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.
எமது தமிழினத்தை அழித்த கோட்டாபாய ராஜபக்ஸவை தமிழர்களுடைய வாக்குகளால் தோற்கடித்து பழி தீர்க்க வேண்டுமாக இருந்தால் அவருக்கு நிகராக போடியிடும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தால் மாத்திரமே அது சாத்தியமாகும். ஏன வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தனது ஊடக அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
இவர் ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் செய்தியில்
எதிர்வரும் நவம்பர் 16 ம் திகதி இலங்கையில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி
தேர்தலில் 30 இற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்ட போதும்
வெல்லக்கூடிய வேட்பாளராக இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே
கருதப்படுகின்றனர்.
ஒருவர் கௌரவ அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றையவர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ.
இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுபவரில் ஒருவர் தமிழ் இனத்தை
கருவறுத்து எங்கள் சிறுவர்களை கொடூரமாக கொலைசெய்தவரும் இஎங்கள் பெண்களை மானவங்கபடுத்தியவரும் ஆவார்.
இன்று பலர் காணாமல் ஆக்கபட்டமைக்கு மூலகர்த்தாவாகவும் இஎமது உறவுகள் பலர் இன்றும் சிறைவாசம் அனுபவிக்க காரணமாக இருந்த முன்னாள் பாதுக்காப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ .
இவர் தமிழ் மக்களுடைய வாக்கிற்காக தமிழர்களை அழித்தது சரி என்ற
அங்கீகாரத்தை தமிழ் மக்களிடமே பெற்றுக்கொள்வதற்காக தமிழ் பிரதேசங்களில் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
தமிழர்கள் நாம் முன்னாள் பாதுக்காப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு அங்கீகாரம் வளங்கபோகின்றோமா?
அங்கீகாரம் கொடுத்து தமிழர்களுடைய வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்தப்போகின்றோமா ?
தமிழர்கள் வாக்கால் அவரை தோற்கடிக்க போகின்றோமா ? என்ற கேள்விகள் எங்கள் கண்முனே நிற்கின்றது.
ராஜபக்ஸ குடும்பத்தில் மூர்கத்தனமான சிந்தனையுடைய கோட்டாபாய ராஜபக்ஸ இந்த தேர்தலில் வென்றால் தற்போது இருக்கின்ற சூழ்நிலை மாற்றம் அடைந்து மக்கள் அச்ச உணர்வுடன் வாழவேண்டிய சூழ்நிலை உருவாகும்இ
இந்த தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு நிகராக அன்னம் சின்னத்தில்
போட்டியிடும் அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாசவுடன் அவர் வெல்லவேண்டும் என
பங்காளிகளாக அவர் வெற்றிக்காக உழைக்கின்ற கட்சிகளில் ஒரு சில கட்சிகள் ஊழல் வாதிகாளாக இருகின்ற போதும்
கோட்டாபாய ராஜபக்ஸவை தமிழர்களுடைய வாக்குகளால் தோற்கடித்து பழி தீர்க்க வேண்டுமாக இருந்தால் அவருக்கு நிகராக போடியிடும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்தால் மாத்திரமே அது சாத்தியமாகும்.
தேர்தலை புறக்கணிப்பது அல்லது வெல்லமுடியாத வேட்பாளர்களுக்கு
வாக்களிப்பது இரண்டுமே கோட்டாபாய ராஜபக்ஸவினுடைய வெற்றிக்கு
வழிவகுக்கும். தற்போது இருக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கையில் இருக்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
கோட்டாபாய ராஜபக்ஸவின் தேர்தல் பிரச்சாரா கூட்டங்களுக்கு எம்மவர்கள்
ஒருசிலர் தங்கள் தனிப்பட்ட நலன்களுக்காக பிரசாரம் செய்வது அவர்கள் தமிழ் மக்களுக்கு இழைக்கின்ற மிகப்பெரும் துரோகம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழினத்தை அழித்த கோட்டாபாயவுக்கு தமிழினம் பாடம்புகட்ட வேண்டுமானால் சஜித்துக்கே வாக்களிக்க வேண்டும் சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.
Reviewed by Author
on
November 14, 2019
Rating:

No comments:
Post a Comment