அண்மைய செய்திகள்

recent
-

தமிழர் பிரச்சனையை மிக இலகுவாக தீர்க்க இதுவே ஒரே வழி! அமைச்சர் டக்ளஸ் -


இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக இலங்கை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையை மிக இலகுவாக தீர்க்க முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆகியோருக்கு இடையில் 1987ஆம் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமே இலங்கை - இந்திய ஒப்பந்தமாகும்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக மாகாண சபைகள் நிறுவப்பட்டன. இதன்படி, தமிழர்களுக்கு வடகிழக்கு மாகாண சபை நிறுவப்பட்ட, பின்னர் அந்த மாகாண சபை முழுமையாக இயங்காமல் போனது.

இலங்கை முழுவதும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளும் நிர்வாக மொழிகளாக இருக்க வேண்டும் என்பதும், சிங்கள மொழிகள் பேசும் பகுதிகளில் அரசின் பொதுப்பதிவேடுகள் மற்றும் அலுவல்கள் சிங்கள மொழியிலும், அவ்வாறே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக இருந்தது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரே 1988இல் இரு மாகாணங்களும் இணைக்கப்பட்டு வடகிழக்கு மாகாணம் அமைக்கப்பட்டது.
எனினும், இந்த இணைப்பு செல்லாது என இலங்கை உயர் நீதிமன்றம் 2006இல் தீர்ப்பளித்த பின், 2007 முதல் மீண்டும் வடக்கு, கிழக்கு என இரு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டதாக” அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழர் பிரச்சனையை மிக இலகுவாக தீர்க்க இதுவே ஒரே வழி! அமைச்சர் டக்ளஸ் - Reviewed by Author on November 24, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.