மன்னார் 'புனித சூசையப்பர் வாசகப்பா' மற்றும் 'அர்ச்சிய சிஸ்ட மூவிராசாக்கள் வாசகப்பா' ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு வைப்பு-படம்
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் நூல் வடிவம் பெற்ற 'புனித சூசையப்பர் வாசகப்பா' மற்றும 'அர்ச்சிய சிஸ்ட மூவிராசாக்கள் வாசகப்பா' ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா நேற்று புதன் கிழமை(6) மாலை 4.30 மணியளவில் மன்னார் பேசாலை சென்.பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த இரு நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மற்றும் விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்,வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன்,மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி க.சிவசம்பு,நானாட்டான் பிரதேசச் செயலாளர் என்.சிறிஸ் கந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் போது நிகழ்வுகள் இடம் பெற்றதோடு குறித்த இரு நூல்களும் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டதோடு,கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் களைஞர்கள்,திணைக்கள அதிகாரிகள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த இரு நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மற்றும் விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன்,மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ்,வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன்,மன்னார் பிரதேசச் செயலாளர் திருமதி க.சிவசம்பு,நானாட்டான் பிரதேசச் செயலாளர் என்.சிறிஸ் கந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதன் போது நிகழ்வுகள் இடம் பெற்றதோடு குறித்த இரு நூல்களும் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டதோடு,கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் களைஞர்கள்,திணைக்கள அதிகாரிகள்,பொது மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் 'புனித சூசையப்பர் வாசகப்பா' மற்றும் 'அர்ச்சிய சிஸ்ட மூவிராசாக்கள் வாசகப்பா' ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு வைப்பு-படம்
Reviewed by Author
on
November 07, 2019
Rating:

No comments:
Post a Comment