1000 முதல் பிரதி நூலை பெற்ற புரவலர் ஹாசிம் உமரின் சாதனை -
நேற்று மாலை மருதானை - சாஹிரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற குமார சஹன் நெத்மின எழுதிய சிறகொடிந்த பறவை எனும் சிங்கள காவிய நூலின் முதற் பிரதி அவர் பெற்ற 1000 ஆவது முதற் பிரதி நூலாகும்.
கடந்த 1994 ஆம் ஆனது முதல் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிறுகதையாளர்கள், கவிஞர்கள், நூலாசிரியர்கள்,கட்டுரையாளர்கள் , இலக்கிய படைப்பாளிகளின் நூல்களின் முதற் பிரதியை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் சிறகொடிந்த பறவை நூலின் முதற் பிரதியைபெற்றுக்கொண்டதன் மூலம் உலகில் ஆயிரமாவது முதல் பிரதிகளை வாங்கிய ஒரே புரவலர் என்ற சாதனையை புரிந்துள்ளார்.
சாஹிரா கல்லூரியின் அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் , சாஹிரா கல்லூரியின் உப அதிபர், ஆசிரியர்கள் பணிப்பாளர் சபை ஆளுனர் அலவி முக்தார், கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
அதே நேரம் இந்த சாதனை நிகழ்வில் அனைவரும் தேசிய உடை அணிந்திருந்தமை குறிப்பிடதக்கது.
1000 முதல் பிரதி நூலை பெற்ற புரவலர் ஹாசிம் உமரின் சாதனை -
Reviewed by Author
on
December 02, 2019
Rating:

No comments:
Post a Comment