அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் பெருமையுடன் நடாத்திய 10வது ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா....

மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் பெருமையுடன் நடாத்திய நாவலர் விழா 29.12.2019 இன்று காலை மன் சித்தி விநாயகர் இந்துக்கல்லூரி நாவலர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக நாவலர் சிலைக்கு மாலை அணிவித்தார் நடேசானந்தன் அவர்கள் அதனை தொடர்ந்து விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு பிரதான மண்டபத்தில் மங்கள விளக்கேற்றல் பொதுச்சுடரினை தலைவர் முதுநிலை விரிவுரையாளர் சைவசித்தாந்ததுறை இந்து கற்கைகள் பீடம் யாழ் பல்கலைகழகம் கலாநிதி திருதிருமதி விக்ணேஸ்வரி பவனேசன் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி. குணபாலன் தலைவர் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியம் வைத்திய கலாநிதி மு. கதிர்காமநாதன் அவர்களுடன் தொடர்ந்து சிறப்பாக தம்பதிகள் நாவலர் சிலைக்கு விளக்கேற்றினர்.

 நிகழ்வை தலைமைதாங்குகின்ற செந்தமிழருவி மஹா தர்மகுமார குருக்கள் பாரியாருடன் விளக்கேற்ற அதனைதொடர்ந்து தம்பதிகளா வருகைதந்தவர்கள் விளக்கேற்ற அறநெறி மாணவர் வழிபாடு அதனை தொடர்ந்து வரவேற்பு நடனம் வரவேற்புரை இடம்பெற்றது.

தலைமையுரை செந்தமிழருவி மஹாதர்மகுமார குருக்கள் வழங்க அதனை தொடர்ந்து பொறியியலாளர் இராமகிருஸ்ணன் இந்நு மஹாசபை மன்னார் திருக்கேதீஸ்வர வரலாறுற்றுரை வழங்கினார்.
சிறப்பு சொற்பொழிவினை தமிழ்மணி கலாநிதி அகளங்கன் ஆற்ற அறநெறி மாணவமாணவிகளின் நாவலர் பெருமான் சிறப்பு பேச்சு,கவிதை,நடனம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்டத்தில் அறநெறி ஆசிரியர்கள் சமய சமூக கல்விப்பணி என ஐந்து பிரிவில் சேவையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானுக்கு மன்னார் மண்ணில் 10ம் முறையாக பெருவிழாவாக நடத்துகின்ற மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் சிறப்பாக தனது பணியை ஆற்றுகின்றது. இவ்நிகழ்வில் பலரும் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.











மன்னார் மாவட்ட அறநெறி பாடசாலைகளின் இணையம் பெருமையுடன் நடாத்திய 10வது ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் விழா.... Reviewed by Author on December 29, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.