அண்மைய செய்திகள்

recent
-

2019 இலங்கை கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு...! இரண்டு விருதுகளை தட்டிச்சென்ற மலிங்கா.. பெரேரா -


2019ம் ஆண்டு சர்வதேச மற்றும் உள்ளுர் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 3ம் திகதி கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள வாட்டர் எட்ஜ் ஹோட்டலில் விருது வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. சிறப்பு விருந்தினராக இந்திய ஜாம்பவான் கபில்தேவ் கலந்துக்கொண்டார்.
இதில், சர்வதேச போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியோருக்காக 17 விருதுகளும், உள்ளுர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தியோருக்காக 27 விருதுகள் உட்பட மொத்தம் 44 விருதுகள் வழங்கப்பட்டன.
அத்துடன் ஆண்டின் சிறந்த சர்வதேச மற்றும் உள்ளுர் நடுவர் மற்றும் போட்டி ரீவியூ விருதுகள் வழங்கப்பட்டது.
2019 சிறந்த வீரர்களுக்கான விருதுகள்:
  • சிறந்த டெஸ்ட் துடுப்பாட்டகாரர் - திமுத் கருணாரத்ன.
  • சிறந்த டெஸ்ட் பந்து வீச்சாளர் - தில்ருவான் பெரேரா.
  • சிறந்த டெஸ்ட் ஆல்-ரவுண்டர் - தனஞ்சய டி சில்வா.
  • சிறந்த ஒருநாள் துடுப்பாட்டகாரர் - குசல் பெரேரா.
  • சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர் - லசித் மாலிங்கா.
  • சிறந்த ஒருநாள் ஆல்-ரவுண்டர் - திசார பெரேரா.
  • சிறந்த டி-20 துடுப்பாட்டகாரர் - திசார பெரேரா.
  • சிறந்த டி-20 பந்து வீச்சாளர் - லசித் மாலிங்கா.
  • சிறந்த டி-20 ஆல்-ரவுண்டர் - இசுரு உடனா.
2019 சிறந்த வீராங்கனைகளுக்கான விருதுகள்:
  • சிறந்த ஒருநாள் துடுப்பாட்டகாரர் -சாமரி அத்தப்பத்து.
  • சிறந்த ஒருநாள் பந்து வீச்சாளர் - ஒஷதி ரணசிங்க.
  • சிறந்த ஒருநாள் ஆல்-ரவுண்டர் - சாமரி அத்தப்பத்து.
  • சிறந்த டி-20 துடுப்பாட்டகாரர் - சாமரி அத்தப்பத்து.
  • சிறந்த டி-20 பந்துவீச்சாளர் - சஷிகலா சிறிவர்த்தன.
  • சிறந்த டி-20 ஆல்-ரவுண்டர் - சஷிகலா சிறிவர்த்தன.
  • 2019 ஆண்டின் சிறந்த பெண்கள் கிரிக்கெட் வீரர் - சாமரி அத்தப்பத்து.
2019 சிறந்த நடுவர்களுக்கான விருதுகள்:
  • சிறந்த சர்வதேச நடுவர் - குமார் தர்மசேனா.
  • சிறந்த உள்ளுர் நடுவர் - லிண்டன் ஹன்னிபால்.
  • போட்டி ரீவியூ விருது உள்ளுர் குழு - மனோஜ் மெண்டிஸ்.
  • வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் - பத்தும் நிஸ்ஸங்கா.





2019 இலங்கை கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு...! இரண்டு விருதுகளை தட்டிச்சென்ற மலிங்கா.. பெரேரா - Reviewed by Author on December 04, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.