அண்மைய செய்திகள்

recent
-

மாற்றுத்திறனாளிகள் வலுவிழந்தாலும் அவர்கள் வாழ்விழக்கவில்லை.மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ

நாம் மாற்றுத்திறனாளிகளை வலுவிழந்தவர்கள் என நினைத்தாலும் அவர்கள்
வாழ்விழந்தோர் என ஒருபோதும் கருத முடியாது. அவர்களில் பலரிடம் பல
திறமைகள் இருப்பதை நடைபெற்ற நிகழ்வின் மூலம் நாம் கண்டுணர முடிகின்றது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமாகிய நேற்று (03.12.2019) 'மார்டப்'
நிறுவன குடும்பம் ஒன்றினைந்து மன்னார் நகர சபை மண்டபத்தில் இவ் நினைவு தினத்தை கொண்டாடினர்.

இதில் கலந்துகொண்ட மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தொடர்ந்து தனது உரையில்

நாம் மாற்றாற்றல் திறனாளிகளை வலுவிழந்தவர்களாக காணலாம். ஆனால் நாம் அவர்களை வாழ்விழந்தோர் என ஒருபோதும் கருத முடியாது.

நாம் இப்பொழுது இந்த மாற்றாற்றல் திறனாளிகளின் கலை நிகழ்வுகளை கண்டு கழித்தோம். இதன் மூலம் இவர்களிடம் எவ்வளவு திறமைகள் இருப்பதை எம்மால் உணரமுடிகின்றது.

இதற்கான நிறுவனங்கள் மூலம் இவர்களுடைய திறமைகளை வெளிக்கொணரும்போது இவர்களுடைய திறமைகள் உலகிற்கு வெளிக்கொணரப்படுகின்து.

மன்னாரில் 'மார்டப்' நிறுவனத்தை ஆரப்பித்து வைத்த அருட்சகோதரி யோசப்பின் (தி.கு) கூறியதுபோன்று இன்று இவ் நிகழ்வில் பத்தில் ஒரு பங்கினரே கலந்து கொண்டுள்ளபோதும் அதிகமானோர் இன்னும் தங்கள் வீடுகளில் முடங்கி கிடக்குகின்றனர்.

இதனால் இவர்களுக்கு இன்று இங்கு செயல்பட்ட இந்த பிள்ளைகள்போன்று
அவர்களுக்கு பயிற்சிகள் மற்றும் அவர்களின் திறமைகளை வெளிக்கொணர முடியாது இருந்திருக்கலாம். நாம் அவர்களின் சமூதாயம் என்ற நிலையில் நாம் அவர்களுக்கு அவர்களின் திறமைகளை உயர் நிலைக்கு கொண்டுவரக்கூடிய சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பெனில் என்ற ஒரு மாற்றுத்திறனாலி இவ் மேடையில் கவிதை ஒன்றை பாடினார். இவர் வலுவிழந்து காணப்பட்டாலும் சர்வதேச ரீதியில் இவர் தனது திறமைகளைக் காட்டி விருதுகளையும் பெற்றிருக்கின்றார் என்பதை நாம் கண்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.

என்னைப் பொறுத்தமட்டில் மன்னார் மறைமாவட்டத்தில் 'மார்டப்' என்ற நிறுவனம் பல வருடங்களாக இயங்கி வருவதையிட்டு இவ் நிறுவனத்துக்கு நன்றி நவிழ்ந்து நிற்கின்றோம்.

திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் ஆதரவுடன் இவ் சபையைச் சேர்ந்த
அருட்சகோதரி யோசவின் இவ் 'மார்டப்' நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தார்கள். இவ் நிறுவனம் மன்னாரில்  இருக்க மேலும் பல கிளைகளாக இந்த மாற்றுத்திறனாளிகளுக்காக சேவைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிறுவனத்தின் மூலம் நீங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு செயல்பாட்டுக்காகவும் நாங்கள் வாழ்த்துக்கள்கூறி நன்றியும் தெரிவித்து நிற்கின்றோம்.
நமக்கு நன்கு தெரியும் மாற்றுத்திறனாளிகளுடன் பணிபுரிவதென்றால் அது ஒரு இலகுவான காரியமல்ல. இவர்களுக்கு பணிபுரிய வேண்டுமானால் நமக்கு பொறுமை புரிந்துணர்வு அவசியமானது.

அவர்களுடன் உறவு வைத்திருக்க வேண்டும். அவர்களின் திறமைகளை அறிந்து அதன் மூலம் நாம் அவர்களை உயர்ந்த இடத்துக்கு வழிகாட்டிச் செல்ல வேண்டும்.

இவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து வாழும் திருக்குடும்ப சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகள் யோசேவின், வசந்தி ஆகியோருக்கும் இவர்களின் ஆளுநர் சபையினருக்கும் இவற்றை முன்னெடுத்துச் செல்லும் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் நவிழந்து நிற்கின்றேன்.

அத்துடன் நீண்ட தூரத்திலுள்ள மொனராகலையிலிருந்து இங்கு கலந்துகொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடன் கலந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன் என்றார்.

மாற்றுத்திறனாளிகள் வலுவிழந்தாலும் அவர்கள் வாழ்விழக்கவில்லை.மன்னார் ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ Reviewed by Author on December 05, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.