ஒரே மேடையில் ஒன்று கூடி சாதனை படைக்கவுள்ள 28000 இரட்டையர்கள்!
இலங்கையின் இரட்டையர் அமைப்பு, இரட்டையர் ஒன்றுக்கூடலில் கின்னஸ் சாதனை ஒன்றை படைக்க முன்வந்துள்ளது.
இதன்படி இந்த ஒன்றுக்கூடல் 2020 ஜனவரி 20முதல் 26 ம் திகதி வரை சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் மொத்தமாக 28ஆயிரம் இரட்டையர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த இரட்டையர்கள் ஜனவரி 19ம் திகதி நீர்கொழும்புக்கு செல்லவுள்ளனர்.20ம் திகதி கொழும்பில் ஒன்றுக்கூடவுள்ளனர்.
இதனையடுத்து தம்புள்ளைக்கு செல்லும் அவர்கள் இறுதியாக கண்டிக்கு செல்லவுள்ளனர்.இவர்களின் கலாசார நிகழ்வு ஜனவரி 22ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரே மேடையில் ஒன்று கூடி சாதனை படைக்கவுள்ள 28000 இரட்டையர்கள்!
Reviewed by Author
on
December 30, 2019
Rating:

No comments:
Post a Comment