பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பின் சடலத்தை 3நாட்கள் தூக்கில் தொங்க விட வேண்டும்
மூன்று நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், தேசதுரோக வழக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை 76 வயதான முஷாரப்பிற்கு மரண தண்டனை விதித்தது.
பெஞ்சாவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகார் அகமது சேத் எழுதிய 167 பக்க விரிவான தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தீரப்பின் 66வது பத்தியில், தப்பியோடிய குற்றவாளியைக் கைது செய்வதற்கும், சட்டத்தின்படி தண்டனை விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் சட்ட அமலாக்கத்துறைக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
முஷாரப் இறந்து கிடந்தால், அவரது சடலம் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள டி-சவுக்கிற்கு இழுத்துச் செல்லப்பட்டு 3 நாட்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் என பல முக்கியமான அரசாங்க கட்டிடங்களுக்கு அருகில் டி-சவுக் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி முஷாரப்பின் சடலத்தை 3நாட்கள் தூக்கில் தொங்க விட வேண்டும்
Reviewed by Author
on
December 21, 2019
Rating:

No comments:
Post a Comment