அண்மைய செய்திகள்

recent
-

பெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம் என்ன? எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம்?


35 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் அதிகம் சந்திக்கும் பிரச்சனைகளுள் “கருவுறாமை” பிரச்சனையும் ஒன்றாகும்.
இது இயற்கையாகக் கருவுற முடியாததைக் குறிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும் எனப்படுகின்றது.

கருவுறாமை பிரச்சனை ஆண் மற்றும் பெண் என்று இருபாலருக்கும், வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகின்றன.
இதற்கான காரணங்களை அறிந்து கொண்டும், அதற்கான சிகிச்சைகளை எடுத்து கொள்வதால் கருவுறாமை பிரச்சனையிலிருந்து விடுபட முடியும்.
அந்தவகையில் தற்போது இதன் காரணங்களையும், எந்த வகை பரிசோதனைகள் செய்து கொள்ளலாம் என பார்ப்போம்.
ஏன் பெண்களுக்கு கருவுறாமை ஏற்படுகின்றது?
  • அண்டவிடுப்பின் போது ஏற்படும் சிக்கல்.
  • கர்ப்பப்பைக் குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் கருப்பை வாயில் பிரச்சனை.
  • மாதவிடாய் ஒழுங்கற்ற காலங்களில் ஏற்படுவது கருவுறாமைக்கான முக்கிய காரணம் ஆகும்.
  • அதிக வயதாகிய பெண்களுக்குக் கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. ஏனெனில் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு குழந்தைப் பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே உள்ளது.
  • ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்சனை ஏற்படுகின்றது.
  • பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது.
  • கருவுறுதலுக்கு பங்கு வகிக்கும் சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது, கருவுறுதலுக்குத் தேவையான சுரப்பிகள் இரத்தத்தில் கலந்திருக்காது. இதுவே கருவுறாமையும் ஏற்படுத்திவிடும்.
எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம் ?
  • இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதைக் கொண்டு சுரப்பியில் உள்ள ஏற்ற இறக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். மேலும் தைராய்டு சுரபியின் செயல்பாட்டையும் அறிந்து கொள்ளலாம்.
  • மார்பகம் மற்றும் இடுப்பு பகுதியில் பரிசோதனை செய்யப்படுகிறது.
  • லேப்ரோஸ்கோப் மூலம் உள்ளுறுப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் கண்டறிவது.
  • எக்ஸ்ரே மூலம் சில அறிகுறிகளைக் கண்டறிய முடியும்.
  • ஹிஸ்டிரோசல்பிங்கோகிராப்பி மூலம் கருப்பை சீர்குலைவுகளைக் கண்டறிந்து தெரிந்து கொள்வது.
  • அல்ட்ரா சவுண்ட் மூலம் கர்ப்பப்பை மற்றும் கரு முட்டைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது.

பெண்கள் கருவுறாமைக்கான முக்கியமான காரணம் என்ன? எந்தவகை பரிசோதனைகள் செய்யலாம்? Reviewed by Author on December 21, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.