மன்னார்-துரையம்மா அன்பகத்தின் 11ம் ஆண்டுப்பூர்த்தியும் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்-படங்கள்
மன்னார் மாவட்டத்தின் கல்விக்கான தனது சேவையினை ஆற்றிவரும் துரையம்மா அன்பகத்தின் 11ம் ஆண்டுப்பூர்த்தியினையும் வருடா வருடம் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இம்முறையும் கள்ளியடி,கத்தாளம்பிட்டி,தேவன்பிட்டி பூமலர்ந்தான்.இலுப்பைக்கடவை கிராமங்களின் தெரிவு செய்யப்பட்ட 65 பயனாளி மாணவ மாணவிகளிற்கு பாடசாலை கற்றல் உபகரண பொதிகள் ஞயிற்றுக்கிழமை 15/12/2019 காலை 10-30 மணியளவில் மன்னார் புனித செபஸ்தியார் மறைக்கல்வி நிலைய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்நிகழ்வில் துரையம்மாஅன்பகத்தின் தலைவர் உடன் நிர்வாக உறுப்பினர்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்ட மாணவமாணவிகள் பெற்றோர்கள் எனபலரும் கலந்து சிறப்பித்தனர்.
மங்களவிளக்கேற்றலுடன் தமிழ்தாய்வாழ்த்தும் அதனைத்தொடர்ந்து துரையம்மா அன்பகத்தின் கீதமும் துரையம்மா அன்பகத்தின் ஸ்தாபகர் அமரர் திரு.உதயன் மனுவேற்பிள்ளை அவர்களுக்கு மலரஞ்சலியும் போசகர் வைத்தியகலாநிதி செ.லோகநாதன்bsms&jp அவர்களையம் நினைவு கூறலுடன் மாணவமாணவிகளின் பாடல்,பேச்சு,கவிதை,நடனம் என்பனவும் இடம்பெற்றது.
.
இவ்நிகழ்வில் தற்போதைய வாழ்க்கைச்சூழலில் பொருளாதாரப்பிரச்சினையினால் கல்வியைதொடரமுடியாத நிலையில் நிறைய மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் அவ்வாறில்லாமல் எமக்கான கல்விச்செயற்பாட்டை சேவையாக ஆற்றிவரும் துரையம்மா அன்பகத்தினர்.(ஸ்தாபகர் திரு.உதயன் மறைந்த பின்பும் எமது கிராமத்தின் மாணவர்களின் நலனில் அக்கறையுடன்) தொடர்ந்து தமது சேவையை செயலாற்ற நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் அவர்களுடன் துரையம்மா அன்பகத்தின் இணைந்து செயற்பட்டால் எமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடு நல்ல முன்னேற்றத்தினை அடைவதோடு வளமான கல்விச்சமூகத்தினை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையுள்ளது மாதர்சங்கதலைவி
துரையம்மா அமைப்பின் தலைவர் மற்றும் பொருளாலர் தமது கருத்தில் எமக்கான ஒத்துழைப்பினை வழங்குவதானால் நாங்கள் எங்களால் இயன்றளவு கல்விச்செயற்பாட்டுக்கு உதவிசெய்வோம் .
மாணவர்களுக்கு அவர்களது கல்விச்செயற்பாட்டுக்காகவே நாம் செயற்பட்டு வருக்கின்றோம் மாணவர்கள் தமது கல்விமுன்னேற்றத்தினை தேர்ச்சியறிக்கை மற்றும் தரப்படுத்தல் நிலையில் பெறுபேறுகளைப்பெற்று முன்னேற்றம் காணவேண்டும் இன்னும் தேவைகளோடு நிறைய மாணவர்கள் எம்மத்தியல் உள்ளார்கள் அவர்களுக்கம் நாம் சந்தர்ப்பங்களை வழங்கலாம் கிடைக்கின்ற சேவையை பெற்று அதை நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றமடையவேண்டும்.
கற்றலால் தான் நாம் இழந்த அனைத்தினையும் பெறமுடியும்
எமது துரையம்மா அன்பகத்தின் சேவை தொடரும்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்BA
மன்னார்-துரையம்மா அன்பகத்தின் 11ம் ஆண்டுப்பூர்த்தியும் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும்-படங்கள்
Reviewed by Author
on
December 17, 2019
Rating:

No comments:
Post a Comment