சிறப்பாக இடம்பெற்ற வவுனியா வடக்கு கலாச்சார விழா -
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் கலாச்சார விழா நேற்று மாலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது வவுனியா வடக்கு மக்களின் கலை, கலாச்சார பண்பாடுகளை வெளிப்படுத்தும் நாட்டிய நாடகங்கள், நடனங்கள், பாராம்பரிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இதில் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் மங்களேஸ்வரன், வவுனியா வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன், வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் ச.தணிகாசலம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், மாணவர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிறப்பாக இடம்பெற்ற வவுனியா வடக்கு கலாச்சார விழா -
Reviewed by Author
on
December 26, 2019
Rating:

No comments:
Post a Comment