நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா? சாள்ஸ் நிர்மலநாதன்MP கேள்வி -
புதிய அரசாங்கம் பதவியேற்று சில மாதங்களே. ஆனால் நாட்டில் ஆங்காங்கே பல இன ரீதியான சம்பவங்களும் தாக்குதல்களும் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மன்னார் தோட்டவெளியில் நேற்று முன்தினம் கத்தோலிக்க மதகுருவை பொலிஸ் அதிகாரி ஒருவர் தள்ளிவிட்டு தகாத வார்த்தைகளால் பேசியும் உள்ளார். சமயக் குருக்கள் மக்களின் மதிப்பிற்கும் வணக்கத்துக்கும் உரியவர்கள்.
இவர்கள் மீது கை வைத்து தள்ளுவது, தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்துவது போன்ற செயற்பாடுகளை எந்த சமூகமும் ஏற்றுக்கொள்ளாது.
பொலிஸ் அதிகாரி முஸ்லிம் இனத்தை சேர்ந்தவராவார். இவரின் மேல் ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இச்சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
குறிப்பிட்ட அதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தகுந்த தண்டனையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
வவுனியாவிலும் இன்றைய தினம் இது போன்று ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண் ஊழியரை நிலையத்தின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளார்.
குறித்த பெண்ணை இதற்கு முன்னரும் பல தடவைகள் தாக்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
வறுமையின் நிமிர்தம் கடையில் வேலைக்கு வரும் பணிப் பெண்களை கொடுமைப்படுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.
இச்சம்பவம் தொடர்பாக தகுந்த விசாரணைகளை மேற்கொண்டு இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க தக்க தண்டனையை தாக்கியவருக்கு வழங்கும் பட்சத்திலே இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும்.
இவ்வாறான இன ரீதியான சம்பவங்களை புதிய அரசாங்கம் கருத்தில் எடுத்து சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா? சாள்ஸ் நிர்மலநாதன்MP கேள்வி -
 
        Reviewed by Author
        on 
        
December 22, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
December 22, 2019
 
        Rating: 


No comments:
Post a Comment