பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல் -
மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்துவதாகவும் எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றம் நிச்சயம் கலைக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று ஊடக பிரதானிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தான் செயற்படுவதற்கு வலுவான அரசாங்கம் ஒன்று அவசியம் எனவும் இந்த நாடாளுமன்றத்திற்குள் அதனை செய்ய முடியாதெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பிற்போடப்பட்ட அனைத்து தேர்தல்களை நடத்துவது தனதும் பிரதமரினதும் நோக்கமாகும். மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தினால் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் எந்த சின்னத்தில் உங்கள் ஆதரவு உறுப்பினர்கள் போட்டியிடுவார்கள் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அது கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமரினால் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பசில் ராஜபக்ஷவினால் அதற்கான பொறிமுறை தயாரிக்கப்படுவதாகவும், தான் அதற்கு ஆதரவு வழங்குவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி  கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல் -
 
        Reviewed by Author
        on 
        
December 16, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
December 16, 2019
 
        Rating: 


No comments:
Post a Comment