மண்கும்பானில் மணல் கொள்ளை- பிரதேச மக்களின் துணிகரசெயல்!
யாழ்.தீவகம் மண்கும்பான் பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்களை வழிமறித்த பிரதேச மக்கள் மணல் கடத்தியவர்களின் உழவு இயந்திரங்களை தீயிட்டு கொழுத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மணல் கொள்ளை இடம்பெற்றுவந்த நிலையில் உடனடியாக அது நிறுத்தப்படவேண்டும் என நீண்டகாலமாக பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனினும் அதனை கருத்தில் எடுக்காத நிலையில் அங்கு தொடர்ந்தும் மணல் கொள்ளை இடம்பெற்றுவந்தது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த மக்கள் நேற்று மணல் ஏற்றிச்சென்ற கொள்ளையர்களை தடுத்து நிறுத்தியபோது கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களின் உழவு இயந்திரங்களை பிரதேசவாசிகள் தீயிட்டு கொழுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்கும்பானில் மணல் கொள்ளை- பிரதேச மக்களின் துணிகரசெயல்!
 
        Reviewed by Author
        on 
        
December 16, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
December 16, 2019
 
        Rating: 



No comments:
Post a Comment