மன்னார் பருப்புக்கடந்தான் பகுதியில் பாழடைந்த கிணற்றிற்குள் விழுந்த யானை நீண்ட நேர போராட்டத்தின் பின் மீட்பு-படம்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பருப்புக்கடந்தான் கிராம பகுதியில் காணப்பட்ட பாழடைந்த கிணற்றினுள் யானை ஒன்று வீழ்ந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானை நேற்று திங்கட்கிழமை 23/12/2019 குறித்த பாழடைந்த கிணற்றினுள் வீழ்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (24) மாலை குறித்த பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் கிணற்றில் யானை வீழ்ந்து கிடப்பதை கண்டு அடம்பன் பொலிஸாhருக்கு தகவல் வழங்கினர்.
-அடம்பன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததோடு,இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த யானையினை மீட்கும் நடவடிக்கை இடம் பெற்றது.
சுமார் 12 வயதுடைய குறித்த யானையை மீட்க முடியாத நிலையில் ஜே.சி.பி.இயந்திரத்தின் உதவியுன் மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
-நீண்ட நேர போராட்டத்தின் பின் இரவு 8.30 மணியளவில் பாழடைந்த கிணற்றில் இருந்து யானை உயிருடன் மீட்கப்பட்டது.
பின்னர் குறித்த யானை அப்பகுதியில் உள்ள காட்டிற்குள் விரட்டி விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த யானை நேற்று திங்கட்கிழமை 23/12/2019 குறித்த பாழடைந்த கிணற்றினுள் வீழ்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை (24) மாலை குறித்த பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் கிணற்றில் யானை வீழ்ந்து கிடப்பதை கண்டு அடம்பன் பொலிஸாhருக்கு தகவல் வழங்கினர்.
-அடம்பன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததோடு,இராணுவத்தினரின் உதவியுடன் குறித்த யானையினை மீட்கும் நடவடிக்கை இடம் பெற்றது.
சுமார் 12 வயதுடைய குறித்த யானையை மீட்க முடியாத நிலையில் ஜே.சி.பி.இயந்திரத்தின் உதவியுன் மீட்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
-நீண்ட நேர போராட்டத்தின் பின் இரவு 8.30 மணியளவில் பாழடைந்த கிணற்றில் இருந்து யானை உயிருடன் மீட்கப்பட்டது.
பின்னர் குறித்த யானை அப்பகுதியில் உள்ள காட்டிற்குள் விரட்டி விடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பருப்புக்கடந்தான் பகுதியில் பாழடைந்த கிணற்றிற்குள் விழுந்த யானை நீண்ட நேர போராட்டத்தின் பின் மீட்பு-படம்
Reviewed by Author
on
December 25, 2019
Rating:

No comments:
Post a Comment