தமிழ்நாட்டில் பேசவே பயமா இருக்கு.. மேடையிலேயே கூறிய நடிகர் மம்மூட்டி
நடிகர் மம்மூட்டி மலையாள நடிகர் என்றாலும் அவரது நடிப்புக்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவர் நடித்துள்ள மாமாங்கம் என்கிற படம் வரும் 12ம் தேதி தமிழ் உட்பட பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
அதற்காக இன்று மம்மூட்டி மற்றும் படக்குழு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது மேடையில் பேசிய மம்மூட்டி, "தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது. சினிமாவில் சரியா தமிழ் பேசி விடுவேன். ஆனால் மேடையில் தப்பு தப்பா தான் பேசுவேன்" என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் பேசவே பயமா இருக்கு.. மேடையிலேயே கூறிய நடிகர் மம்மூட்டி
Reviewed by Author
on
December 03, 2019
Rating:

No comments:
Post a Comment