மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இடம்பெறுகின்றன.
மன்னார் மறைமாவட்டத்தில் இடம்பெற்ற வருடாந்த மறைக்கல்விக்கான பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி, திருவிவிலியம், கல்விப்பணியகத்தின் இயக்குனர் அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா தெரிவித்தார்.
வட மாகாணத்தில் வவுனியா, மன்னார் நிர்வாக மாவட்டங்களிலுள்ள மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க மாணவர்களுக்கான வருடந்த மறைக்கல்வி பரீட்சை கடந்த வியாழக்கிழமை (28.11.2019) இடம்பெற்றது.
இவ் பரீட்சையில் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள 46 பங்குகளிலிருந்தும் 186
பாடசாலைகளில் 12700 கத்தோலிக்க மாணவர்கள் தோற்றியிருந்தனர்.
இவ் பரீட்சைக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மன்னார் மறைக்கல்வி நடுநிலையத்தில் இதன் இயக்குனர் அருட்பணி கி.அந்தோனிதாஸ் டலிமா அடிகளாரின் தலைமையில் நடைபெற்று வருகின்றன.
இவ் விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 95 மறைவாழ்வுப் பணியாளர்களும்,
கத்தோலிக்க ஆசிரியர்களும் காலை 8 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை ஈடுபட்டு வருவதாகவும் இன்று செவ்வாய் கிழமையுடன் திருத்தும் பணிகள் முடிவுறும் எனவும் இதன் இயக்குனர் தெரிவித்தார்.
புள்ளிகள் அடிப்படையில் மறைமாவட்ட ரீதியில் முதல் மூன்று இடங்களைப்
பெறுவோர்களை மறைமாவட்ட ரீதியில் கௌரவிக்கப்படுவர்.அத்துடன் 100 புள்ளிகள் பெறுவோருக்கு அவர்களுக்கான கோல்ட்
சான்றிதழ்களும், 80 லிருந்து 99 புள்ளிகள் பெறுவோருக்கு வெள்ளி, 75
லிருந்து 79 வரைக்கும் புள்ளிகள் எடுத்த மாணவர்களுக்கு வெண்கலம்
பதிக்கப்பட்ட சான்றிதழ்களும் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார்.
இவ் சான்றிதழ்கள் பங்குகளில் இடம்பெறும் ஒளி விழாவின்போது மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Reviewed by Author
on
December 03, 2019
Rating:

No comments:
Post a Comment