வட மாகாணத்தில் மன்னார் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம்...சிறந்த அலுவலகமாக தெரிவு
வட மாகாணத்திலுள்ள வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி,
மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் இயங்கி வரும் கூட்டுறவு அபிவிருத்தி
ஆணையாளர் அலுவலகங்களில் மன்னார் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலகம் சிறந்த அலுவலகமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
-அத்துடன் கூட்டுறவு அலுவலக சேவையில் சிறந்த சேவையாளர் என்ற
பாராட்டையும் அதற்கான பாராட்டு பத்திரத்தையும் வவுனியாவில் இயங்கிவரும் மாகாண கூட்டுறவு பயிற்சி நிறுவன பணிப்பாளர் கிறகோறி சந்திரசேகரன் பெற்றுள்ளார்.
-வியாழக்கிழமை (19.12.2019) மன்னார் அடம்பன் பகுதியிலுள்ள மாந்தை வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நடைபெற்ற ஐந்தாவது கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த மாநாடு விழாவின்போது வெற்றியாளர்களுக்கான கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
-இவ் நிகழ்வில் வட மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவுத்துறை
அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான பொ.வரதீசன், இலங்கை மத்திய வங்கி பிராந்திய முகாமையாளர் ப.சிவதீபன், வடக்கு மாகாண சபை கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு செயலாளர் திருமதி பி.உமா ஆகியோர் உட்பட பலர் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Reviewed by Author
on
December 20, 2019
Rating:

No comments:
Post a Comment