முல்லைத்தீவில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு -
முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக வீதிகள் நீர் தேங்கி போக்குவரத்து செய்ய முடியாநிலையில் காணப்படுகின்றது.
தொடர்ச்சியான மழை காரணமாக முல்லைத்தீவிலுள்ள பல நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. இதனால் நந்திக்கடலில் நீர்மட்டம் அதிகரித்து வட்டுவாகல் பாலத்துக்கு மேலாக நீர் வழிந்து பாய்கின்றது . இதன் காரணமாக குறித்த பாலத்தினூடான போக்குவரத்து அபாயம்மிக்கதாக மாறியுள்ளது .
இன்று அதிகாலை முதல் குறித்த பாலத்துக்கு மேலாக நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. நீர் பாலத்துக்கு மேலாக பெருக்கெடுத்து ஓடுவதால் பல விபத்துகள் குறித்த பகுதியில் இன்றையதினம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நீர் வரத்து அதிகரித்துள்ளமையால் பாலம் முழுமையாக சில இடங்களில் மூடியுள்ளது . பல இடங்களில் பாலமும் சேதமடைந்துள்ளது . ஒவ்வொரு மழைகாலங்களிலும் குறித்த பாலம் இவ்வாறான நிலைமைக்கு செல்வதோடு ஆபத்தான முறையில் பிரயாணிகள் பயணம் செய்யவேண்டிய நிலையும் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவில் கனமழையால் போக்குவரத்து பாதிப்பு -
Reviewed by Author
on
December 02, 2019
Rating:

No comments:
Post a Comment