இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அவசியம் வழங்கப்பட வேண்டும்!
இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டியது அவசியம் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காலத்திலேயே பொதுக்குழுவில் இதுபோன்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்திய மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை என்று கூறியதால் அந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்தேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அவசியம் வழங்கப்பட வேண்டும்!
Reviewed by Author
on
December 18, 2019
Rating:

No comments:
Post a Comment