சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய தமிழ் அகதிகள் குறித்து தீவிர விசாரணை!
தமிழகத்தின் பாம்பன் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வருகைதந்தாக தெரிவிக்கப்படும் நான்கு அகதிகள் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமண்டர் இசுறு சூரியபண்டார இதனை தெரிவித்துள்ளார்.
சேலம் மற்றும் மண்டபம் முகாமில் தங்கியிருந்த நான்கு அகதிகள், சட்டவிரோதமாக படகில் இன்று இலங்கையை நோக்கி வந்தாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இவ்வாறு வருகை தந்தவர்கள் யாழ்.நெடுந்தீவு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் கடற்படை பேச்சாளர் லெப்டினட் கொமண்டர் இசுறு சூரியபண்டாரவிடம் இது தொடர்பில் வினவிய போது இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“இந்தியாவில் இருந்து வருகைதந்தாக தெரிவிக்கப்படும் நான்கு அகதிகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக” கூறினார்.
சட்டவிரோதமாக தாயகம் திரும்பிய தமிழ் அகதிகள் குறித்து தீவிர விசாரணை!
Reviewed by Author
on
December 29, 2019
Rating:

No comments:
Post a Comment