உலகின் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியல்: பிரித்தானியா மகாரணியை பின்னுக்கு தள்ளிய இந்திய பெண் -
உலகில் செல்வாக்குமிக்க பெண்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. அரசியல், வர்த்தகம், பொழுது போக்கு உள்ளிட்ட துறைகளில் அடிப்படையில் இது வெளியிடப்படும், அந்த வகையில் தற்போது 2019-ஆம் ஆண்டிற்கான உலகின் 100 செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் முதல் இடத்தில் ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளார். இவர் தொடர்ந்து 9 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

கடந்த ஆண்டில் 22-ஆவது இடத்தில் இருந்த ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் கிறிஸ்டின் லார்கட் தற்போது 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மூன்றாவது இடத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த நீதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக

பிரித்தானியா மகாரணி எலிசபெத் 40-ஆவது இடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மகள் இவாங்கா 42ஆவது இடத்திலும், டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் 81 வது இடத்திலும், சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி கிரேடா தன்பர்க் 100ஆவது இடத்திலும் உள்ளனர்.
உலகின் செல்வாக்கு மிக்க பெண்களின் பட்டியல்: பிரித்தானியா மகாரணியை பின்னுக்கு தள்ளிய இந்திய பெண் -
Reviewed by Author
on
December 14, 2019
Rating:
No comments:
Post a Comment