நீதிமன்ற முன்றலில் சான்று பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சேதப்படுத்திய சாரதி கைது.
மன்னார் நீதவான் நீதிமன்ற முன்றலில் ஒரு வழக்கின் தடயப் பொருளாக
வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது டிப்பர் வாகனம் ஒன்று மோதி அவ்
வாகனத்தை சேதப்படுத்தியமையால் அதன் சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த புதன் கிழமை (01.01.2020) அன்று நடைபெற்ற இவ் சம்பவம் தொடர்பாக
தெரியவருவதாவது
போதைவஸ்து தொடர்பாக கைது செய்யப்பட்ட வாகனம் ஒன்று சான்று பொருளாக மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கு முன்பாக
நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
சம்பவம் அன்று டிப்பர் ஒன்று அவ் வழியை தாண்டி செல்ல முற்பட்டபோது
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதுண்டதால் சான்று பொருளாக நிறுத்தி வைக்கப்படடிருந்த வாகனம் சேதத்துக்கு உள்ளாகியது.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற பதிவாளர் மன்னார் பொலிசில் செய்து கொண்ட
முறைப்பாட்டைத் தொடர்ந்து டிப்பர் வாகன சாரதியை கைது செய்த மன்னார்
பொலிசார் சந்தேக நபரை நேற்றைய தினம் வியாழக்கிழமை (02.01.2020)
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா
முன்னிலையில் ஆஐர்படுத்தினர்.
சந்தேக நபர் சார்பாக சட்டத்தரணி செல்வராசா டினேசன் ஆஐராகி வாதித்ததைத் தொடர்ந்து சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவு இட்டதுடன் வழக்கை பிறிதொரு தினத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.
நீதிமன்ற முன்றலில் சான்று பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சேதப்படுத்திய சாரதி கைது.
Reviewed by Author
on
January 04, 2020
Rating:

No comments:
Post a Comment