அண்மைய செய்திகள்

recent
-

பழமைவாய்ந்த புனித செபஸ்தியார் பேராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மன்னார் மறைமாவட்டத்தின் பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்தில் வெடிப்புத் தன்மை எற்பட்டுள்ளதால் ஆலயத்துக்குள் பக்தர்கள் செல்லவோ வழிபாடுகள் நடத்தவோ தடைசெய்யப்பட்ட நிலையில் ஆலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பேராலய பங்குத் தந்தை அருட்பணி ஏ.ஞாணப்பிரகாசம் அடிகளார் தெரிவித்தார்.

பழமைவாய்ந்த மன்னார் மறைமாவட்டத்தின் பேராலயமான புனித செபஸ்தியார் ஆலயத்தின் திருப்பலி பீடம் அமைந்திருக்கும் பகுதியான 'டோம்' என அழைக்கப்படும் குவிந்த கூரை பகுதி வெடிப்புத் தன்மை ஏற்பட்டு அதற்கு மேல் அமைந்துள்ள சிலுவையின் சிறிய பாகம் இடிந்து விழ ஆரம்பித்துள்ளது.

அத்துடன் இவ் ஆலயத்துடன் இணைந்துள்ள உயர்ந்த மணிக்கோபுரத்தின் ஒரு பகுதியிலும் வெடிப்பு தன்மை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இவ் ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் பாதிப்புக்குள்ளாகக் கூடாது என்ற நோக்கத்துக்காக தற்பொழுது இவ் பேராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆலயத்தை புனரமைப்பதற்கான முன்னேற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக இவ் பேராலய பங்கு தந்தை அருட்பணி ஏ.ஞாணப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

அதேநேரத்தில் இவ் ஆலயத்தில் நடக்கும் அனைத்து வழிபாடுகளும் இவ் ஆலயத்துக்கு அருகைமையிலுள்ள வழிபாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

பழமைவாய்ந்த புனித செபஸ்தியார் பேராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. Reviewed by Author on January 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.