ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! -
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று, கடந்த 1073 நாட்களாக போராடி வரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பத்திரிக்கை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும், ஒடுக்கப்பட்ட பத்திரிக்கை சுதந்திரம் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதையை தாங்கியவாறும், எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டித்து பத்திரிக்கையாளர்களின் ஒரு பங்கு ஜனநாயகத்தை வளப்படுத்துவது, ஊடகவியலாளர்கள் நிகழ்வுகள் மற்றும் பிரச்சினைகள் என்பன தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கின்றது.
பத்திரிக்கையின் செயற்பாடுகள் தகவல், கல்வி மற்றும் வழிகாட்டல், பத்திரிக்கை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். ஒடுக்கப்பட்ட பத்திரிக்கை சுதந்திரம் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியாவின் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! -
Reviewed by Author
on
January 28, 2020
Rating:

No comments:
Post a Comment