83 பேருடன் பயணித்த விமானம் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து..?
அரியானா ஆப்கானிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் கிழக்கு காஸ்னி மாகாணத்தில் டெஹ் யாக் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமான் ஹெராட்டில் இருந்து காபூலுக்கு பயணித்துக்கொண்டிருந்த நிலையில் இத்துயரம் நிகழ்ந்துள்ளது.
பயணிகள் மற்றும் பணியாளர்களின் கதி என்னவென்று தெரியவில்லை, ஆனால், பலர் உயரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
திங்கள்கிழமை உள்ளுர் நேரப்படி மதியம் 1.15 மணியளவில் விமானம் விபத்துக்குள்ளான போது அதில் 83 பேர் இருந்ததாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவித்தன.
தலிபான் குழுவைச் சேர்ந்தவர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து விபத்துக்குள்ளான தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவயிடத்திற்கு ஆப்கான் சிறப்பு படை விரைந்துள்ளதாக உள்ளூர் மாகாண சபை உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார்.
எனினும், அரியானா ஆப்கானிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம், இதுபோன்ற விபத்து ஏற்படவில்லை என அதிரடியாக மறுத்துள்ளது.

83 பேருடன் பயணித்த விமானம் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து..?
Reviewed by Author
on
January 28, 2020
Rating:
No comments:
Post a Comment