அண்மைய செய்திகள்

recent
-

போதைப் பொருள் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு - விவசாய ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க

போதைப் பொருள் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகள், அரசாங்க  அதிகாரிகள் மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாகவும், இதனால் முழு நாட்டிலுள்ள பிள்ளைகளுக்கும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக விவசாய ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

“ பண்டாரகம பிரதேசத்தில் சுமார் 192 Kilo  ஹெரோயின் போதைப் பொருள் மாத்திரமல்ல, ஆயுதங்களும் பிடிப்பட்டன. இந்த போதைப் பொருள் எங்கு செல்கிறது?. யார் இதனை கடத்தி வருகின்றனர்?. உங்கள் பிள்ளைகள் இதற்கு அடிமையாகி இருக்கலாம். உங்கள் பிள்ளைகள் போதைப் பொருளை பயன்படுத்துகின்றனரா இல்லையா என்பது உங்களுக்கு தெரியுமா?.

பாடசாலைக்கு எதிரே எந்தளவுக்கு இப்படியான வியாபாரத்தை செய்கின்றனர். எமது பிள்ளைகள் எவரும் பாதுகாப்பாக இல்லை என்பதை நான் பொறுப்புடன் கூறுகின்றனர். இவற்றின் வேரை தேடினால் அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது. அப்படியென்றால் இதனை யாரிடம் சொல்வது?. மக்களின் வாழ்கை அழிக்கவும் சமூகத்தை அதளபாதாளத்திற்கு தள்ளவும் பல வேலைகள் நாட்டில் நடக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகத்துடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு - விவசாய ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க Reviewed by Author on February 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.